பொதுமக்களின் உதவியை நாடியுள்ள சம்மாந்துறை பொலிஸார்

சம்மாந்துறை பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கண்டுபிடிப்பதற்கு பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக சில மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை இனம் கண்டுள்ள பொலிஸார் பல்வேறு திருட்டுச் சம்பவம் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குறித்த நபரை கண்டால் அல்லது குறித்த நபர் பற்றிய தகவல் தெரிந்தால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

மேலும் சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் 0672 260 222 என்ற சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்