பொதுத் தேர்தல்: அடையாளமிடும் கைவிரலில் மாற்றம்
பொதுத் தேர்தல் வாக்கெடுப்பின்போது வாக்காளர்களின் இடது கையின் ஆள்காட்டி விரலிலேயே, அடையாளமிடப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தாா்.
இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பெருவிரல் மற்றும் சுண்டுவிரல் என்பன கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்களின்போது பயன்படுத்தப்பட்டதால் இம்முறை இடது கையின் ஆள்காட்டி விரலை பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தாா்.