
பொடி லெஸ்ஸி’ இந்தியாவில் கைது!
திட்டமிடப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரும், போதைப்பொருள் வர்த்தகருமான ‘பொடி லெஸ்ஸி’ இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மும்பையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இந்திய பாதுகாப்புப் படைக்கு அறிவிக்கப்பட்டதாகப் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
இதன்படி, வழங்கப்பட்ட தகவலுக்கமைய அவர் இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து பலப்பிடிய நீதவான் உத்தரவிட்டிருந்தார்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்