பைசர் தடுப்பூசி தொடர்பில் புதிய அறிவிப்பு

பைசர் தடுப்பூசியை முதலாவது, இரண்டாவது டோசாகப் செலுத்திக்கொள்வதற்கு மக்களுக்குப் புதிய வாய்ப்பு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவையின் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு மாத்திரமே பைசர் தடுப்பூசி முதலாவது டோசாக வழங்கப்படுகிறது. ஏனையோருக்கு பைசர் மூன்றாவது (பூஸ்டர்) டோசாகவே செலுத்தப்படுகிறது.

இதேவேளை சில நாடுகளுக்கு செல்லும்போது பைசர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதால், அவ்வாறானவர்களுக்குப் இப்புதிய வாய்ப்பு பெரும்பலன் உள்ளதாக அமையும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை சுகாதார அமைச்சின் வசமுள்ள பைசர் டோஸ்களில் பெரும்பலானவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் காலாவதியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் மொத்த சனத்தொகையில் ஒருகோடியே 40 இலட்சத்துக்கு அதிகமானவர்கள் இதுவரையில் முதலாவது இரண்டாவது தடுப்பூசியை செலுத்திகொண்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. பூஸ்டர் தடுப்பூசியை 76 இலட்சம் பேர் இதுவரையில் செலுத்திக்கொண்டுள்ளனர்.