பேருந்து விபத்து : கால்வாயில் தூக்கி வீசப்பட்ட பயணிகள்!

ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் தங்காலை மாரகொல்லி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது 7 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாரதியால் அதிவேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் பேருந்து, பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தின் முன் பகுதி சேதமடைந்துள்ளது.

பேருந்து பாலத்தில் மோதியவுடன், ஐந்து பயணிகள் கால்வாயில் வீழ்ந்ததாகவும், அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்