பேருந்து மோதி பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியின் கல்லேல்ல பகுதியில்,  நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 55 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

குறித்த நபர் தனது நண்பர்களுடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் பின்னர் பேருந்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க