
பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு
கம்பஹா பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளdu;
சிறிய ரக பாரவூர்தி ஒன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தின் போது பாரவூர்தியில் இருந்த இருவரும் அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பாதுகாப்பாகத் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இருவரும் தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்