பேருந்துகள் உள்ளிட்ட வாகன சாரதிகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள்!
பண்டிகை காலத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை முதல் பயணிகள் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனைக்குப்படுத்தும் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அண்மைய நாட்களில் பயணிகள் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களால் ஏற்படும் விபத்துகளைக் கருத்திற்கொண்டு இந்த விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பதில் காவல் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பிலும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் போது கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 119 மற்றும் 1997 ஆகிய துரித இலக்கங்களுக்கு தகவல் வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்