பேருந்துடன் மோட்டார்சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் காயம்

நுவரெலியா – டிக்கோயா சாஞ்சிமலை பிரதான வீதியின் பிலிங்கிபோனி என்ற இடத்தில் இன்று புதன் கிழமை காலை 9 மணியளவில் பேருந்துடன் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் போட்டார்சைக்கிளில் பயணித்தவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்