பேச்சுவார்த்தை தோல்வி : தொடரும் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துத் தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் திடீர் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர்.

இவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தோல்வியடைந்ததை அடுத்து பணிப்புறக்கணிப்பை தொடரும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.