பெற்றோரை இழந்து அநாதையான 3 பிள்ளைகள் : அநாகரிகமாக எள்ளிநகைக்கும் பதிவுகள்!

இந்தியா தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த பகுதியில் கள்ளச்சாரம் அருந்தி உயிரிழக்கும் சம்பவம் கடந்த காலங்களில் இருந்து தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கள்ளச்சாரம் விற்பனை மற்றும் விநியோகம் செய்யும் பலர் தற்போது கைது செய்யப்பட்டுக்கொண்டிருப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் ஒரு தம்பதியினரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. கணவன் மனைவி இருவரும் கள்ளச்சாராயம் அருந்நி உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ள நிலையில் குறித்த தம்பதியினரின் மகனான சிறுவன் ஒருவன் தனது தாய் தவறுதலாகவே அதை குடித்ததாக தெரிவித்துள்ளார்.

அச்சிறுவன் எனது தந்தை சாராயம் குடித்துவிட்டு பாதியை அப்படியே வீட்டில் வைத்துவிட்டு சென்று விட்டார். எனது தாய்க்கு வயிற்றுவலி பிரச்சினை இருக்கிறது. அவர் நீண்டகாலமாக வயிற்றில் ஏற்படும் வலிக்காக சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்வாறான நிலையில் தந்தை பாதி குடித்துவிட்டு வைத்துவிட்டு சென்ற சாராயத்தை எனது தாய் மருந்து என்று நினைத்து குடித்து விட்டார். அதனால் தான் அவரும் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கும் காணொளி ஒன்று செய்திகளில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இவ்வாறான நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த குறித்த தம்பதியினரின் ஒரு பெண் பிள்ளை மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள் என மூன்று பிள்ளைகளும் பெற்றோரை இழந்து அனாதையாகியுள்ளனர்.

தாய் தந்தை இருவரையும் இழந்த பெண் பிள்ளையான கோகிலா மற்றும் அவருடைய இரண்டு சகோதரர்கள்

அத்துடன் குறித்த தம்பதியினரின் புகைப்படத்தை வைத்து கணவனுடன் சேர்ந்து சாராயம் அருந்திய பெண் என குறிப்பிட்டு  மனம் வருந்ததக்க தவறான வார்த்தை பிரயோகங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

மூன்று பிள்ளைகள் தமது பெற்றோரை இழந்து எதிர்காலம் என்னவென்று தெரியாமல் தவித்திருக்கும் நிலையில் இவ்வாறான பதிவுகள் மனிதர்களிடையே இருக்கும் மிருககுணத்தை வெளிப்படுத்துவதை அவதானிக்க முடிகிறது.

உயிரிழந்த தம்பதி தொடர்பில் பதிவிடப்பட்டுள்ள பதிவு ஒன்று

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்