பெறுமதியான பொருளுடன் ஆசிரியை உள்ளிட்ட நால்வர் கைது

திஸ்ஸமஹாராம பகுதியில் இரண்டு கஜ முத்துக்களை வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லவாய பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை ஆசிரியை உட்பட புத்தல, வெல்லவாய மற்றும் கல்கமுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கஜ முத்துக்களை விற்பனை செய்வதற்காக திஸ்ஸமஹாராம பிரதேசத்திற்கு வருகை தந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர்கள் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்