பெண் வைத்தியர் கொலை : ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்குத் தடை
இந்தியாவின் கொல்கத்தாவில் பயிற்சி நிலை பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொது மக்கள் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்ட இந்த தடையுத்தரவு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அமுலில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பயிற்சி நிலை பெண் மருத்துவருக்கு நீதி கோரி இந்தியா முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
கொல்கத்தாவிலுள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றின் வைத்தியசாலையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி நிலை பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 9 ஆம் திகதி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து கொல்கத்தாவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், தொடர்புடைய வைத்தியசாலை மீது பலர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்தநிலையில் குறித்த சம்பவத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வலுப்பெற்றுள்ளன.
குறித்த போராட்டங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையிலே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்