பெண் ஊழியரை வெட்டிய இளைஞர்
இந்தியாவில் தருமபுரி குமாரசாமிபேட்டையிலுள்ள துர்க்கையம்மன் கோயிலுக்குள் கஞ்சா போதையில் நுழைந்த இளைஞர், அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணை கத்தியால் 13 இடங்களில் வெட்டியுள்ளார்.
இதன்போது மற்றவர்களிடம் இருந்து தப்பிக்க, கருவறைக்குள் சென்று பூட்டிக்கொண்ட அவரை பொலிஸார் சாதுர்யமாக பேசி வெளியே வரவழைத்து கைது செய்தனர்.
மேலம் விசாரணையில், அந்த இளைஞனின் பெயர் சித்தி விக்னேஷ் என்பதும் திருச்செந்தூரைச் சேர்ந்த டிப்ளமோ பட்டதாரி என்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்