Sri Lanka Tamil News Site

பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

- Advertisement -

தனிப்பட்ட உறவு குறித்து ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வனாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களப்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

உயிரிழந்தவர் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!