பெட் கம்மின்ஸின் ஹட்ரிக் சாதனை

ஐசிசி இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் (Pat Cummins) தொடர்ச்சியாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஹட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றில் அவுஸ்திரேலிய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

நோர்த் சவுண்டில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் அணியின் தலைவர் Najmul Hossain Shanto அதிகபட்சமாக 41 ஓட்டங்களையும், Towhid Hridoy 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Pat Cummins 3 விக்கெட்டுக்களையும் (ஹட்ரிக் ), Adam Zampa 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

உலகக் கிண்ணத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்காக அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹட்ரிக் சாதனை படைத்த இரண்டாவது வீரர் இவர் ஆவார்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக பிரட் லீ, 27 ஓட்டங்களுக்கு தொடர்ச்சியாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஹட்ரிக் சாதனை படைத்திருந்தார்.

அதற்குப் பின்னர் பட் கம்மின்ஸ் இம்முறை 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளாரர்.

இதேவேளை 2006 மற்றும் 2007ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் துடுப்பாட்ட வீரருக்கான விருதை வென்ற ரிக்கி பொண்டிங், பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டுக்கான ஆடவர் துடுப்பாட்ட வீரருக்கான விருதை கம்மின்ஸுக்கு வழங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்