Sri Lanka Tamil News Site

பூண்டு திருட்டு தொடர்பில் ஐவர் கைது

- Advertisement -

ராகம பகுதியில் கொள்கலனொன்றில் இருந்து 777 கிலோ கிராம் பூண்டு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான 33,000 கிலோ பூண்டு ஏற்றப்பட்ட கொள்கலனில் இருந்து சந்தேகநபர்கள் மோசடியான முறையில் பூண்டை திருடியுள்ளதாகவும், சுங்க திணைக்களத் இருந்து விடுவிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

- Advertisement -

திருடப்பட்ட 777 கிலோ பூண்டை விற்பனை செய்ய முற்பட்ட இரு சந்தேகநபர்களும், அவற்றை கொள்வனவு செய்ய வந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் , இவர்களிடமிருந்து ரூ. 734,840 மீட்கப்பட்டுள்ளதாகவும்; பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 28, 44 மற்றும் 50 வயதுடைய தெஹியோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -