புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக ‘இலவச மதிப்பெண்’ வழங்குவதற்கு, பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மிக விரைவாக புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.