புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி நூல் வழங்கி வைப்பு!

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வுக்குத் தோற்றும் மாணவர்களது பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கோடு குச்சவெளிக் கோட்டத்தில் உள்ள கோணேசபுரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, பெரியகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவருக்கு ஒவ்வொன்றும் 1680 ரூபா பெறுமதியான ஞானோதயம் என்னும் புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி நூல் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு.சண்முகம் குகதாசன் இவற்றை வழங்கி வைத்தார்.

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நூல் வழங்களுக்கான அனுசரணையைச் சுவிசர்லாந்து நாட்டில் வாழும் திரு.கனகசபை யோகானந்தன் என்பவர் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்