புற்றுநோய் பாதிப்பால் பிரபல நடிகை காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகை டயேன் டெலனோ புற்றுநோய் பாதிப்பு காரணமாகக் உயிர் இழந்துள்ளார்.

67 வயதான டயேன் தனது இல்லத்தில் உயிர் இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1957ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸில் பிறந்த டெலானோ, தனது 6 வயது முதலே நடிக்க ஆரம்பித்துள்ளார்.

நார்தன் எக்ஸ்போஷர் மற்றும் தி விக்கர் மேன் போன்ற தொடர்களில் இவர் நடித்த கதாபாத்திரம் இரசிகர்களிடம் முக்கிய இடம் பிடித்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்