புருவம் அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்

புருவம் அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்

புருவம் அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்

🟤கண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும், அழகான புருவங்கள் இல்லையென்றால், முகம் எவ்வளவு அலங்கரித்தாலும் அழகில்லாமல் இருக்கும். அதனால் இயற்கை வைத்தியம் மூலம் ஒரு வாரத்தில் அழகான புருவங்களை பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

◼கற்றாழை ஜெல்லை நேரடியாக புருவங்களில் தடவ வேண்டும். 20 நிமிடம் உலர்த்திய பின் கழுவவும். இப்படி ஒரு வாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வலுவான புருவத்தை அடைய முடியும்.

◼ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தினால் இரண்டே நாட்களில் பலன் கிடைக்கும். ஆலிவ் எண்ணெய் சிறந்த வீட்டு வைத்தியம். தூங்குவதற்கு முன், ஆலிவ் எண்ணெயை புருவங்களில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இந்த எண்ணெய் புருவங்களின் முடியை அடர்த்தியாக வளரச் செய்கிறது.

◼புருவங்கள் அடர்த்தியாக இருக்க தேங்காய் எண்ணெய் தடவலாம். அதுமட்டுமின்றி, புருவங்களுக்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கிறது. எனவே, உங்கள் புருவங்களை அடர்த்தியாகவும் அழகாகவும் மாற்ற, இயற்கையான தேங்காய் எண்ணெயை ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவுவது நல்ல பலனைத் தரும்.

◼பாதாம் எண்ணெயுடன் புருவங்களில் தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். மேலும் இந்த எண்ணெயை இரவில் புருவங்களில் தடவி காலையில் குளித்தால் அதிக பலன் கிடைக்கும்.

◼அடர்த்தியான புருவங்களுக்கு மற்றொரு பயனுள்ள வீட்டு வைத்தியம் வெங்காய சாறு, ஆனால் இந்த வாசனை சிலருக்கு விருப்பம் இல்லை. ஆனால் வேறு வழியில்லை. வெங்காயச் சாற்றில் பஞ்சை நனைத்து புருவத்தில் தடவவும். இந்த சாற்றை தடவி, காய்ந்ததும் ரோஸ் வாட்டரால் கழுவ வேண்டும். இது சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது.

◼ஆமணக்கு எண்ணெய் மிகவும் தடிமனாகவும் எண்ணெய் நிறைந்ததாகவும் தெரிகிறது. ஆமணக்கு எண்ணெயில் பஞ்சை தோய்த்து புருவங்களில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவவும். இந்த எண்ணெயின் பண்புகள் சருமத்திற்கு சரியான ஊட்டச்சத்தை அளித்து புருவங்களை அடர்த்தியாக வளரச் செய்கிறது.

◼தினமும் தூங்குவதுற்கு முன்பு புருவங்களில் விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் இரண்டு மாதங்களில் புருவம் அடர்த்தியாக  மாறுவதைக் காணலாம்.

◼பாலில் இருக்கும் புரோட்டின் சத்து புருவ வளர்ச்சியை தூண்டும் அற்புதமான ஒரு சத்து ஆகும். உங்கள் புருவத்தின் மீது பஞ்சினால் நனைக்கப்பட்ட பாலை தடவி விடுங்கள். 15 நிமிடம் அப்படியே உலர விட்டு பிறகு கழுவினால் புருவத்திற்கு ஊக்குவிப்பு கிடைக்கும். பாலில் ‘வே புரோட்டின்’, ‘கேசின்’ போன்ற மூலக்கூறுகள் புருவத்தில் இருக்கும் முடி வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும்.

◼முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்து அதை நன்கு பீட்டர் கொண்டு பீட் செய்தால் க்ரீம் போன்ற டெக்சர் கிடைக்கும். அதை ஒரு பிரஸ் போன்றவற்றால் எடுத்து புருவங்கள் மீது தடவி 20 நிமிடம் உலர விட்டு கழுவினால் கெரோட்டின் உற்பத்தி ஆகி முடி வளர்ச்சி அதிகரிக்கும். இதிலிருக்கும் ‘பயோட்டின்’ என்னும் மூலப்பொருள் நம்முடைய புருவத்தை நல்ல அடர்த்தியாகி கருகருவென மாற்றும்.

புருவம் அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்