புயல் கரையை கடக்கும் நேரத்தில் 90 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்!
‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ள வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் , இன்று சனிக்கிழமை பிற்பகல் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கான “சிவப்பு எச்சரிக்கை” விடுக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் 90 கிலோமீற்றர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.