புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்திற்கு விஷேட ஏற்பாடு

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கூடுதலான பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி பயணிகளின் போக்குவரத்தை இலகுபடுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மேலும், ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து விசேட பஸ் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

பஸ்களை இயக்கும் போது கொரோனா விதிகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.