புத்தாண்டு தினத்தன்று 80 பேர் மருத்துவமனையில் அனுமதி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு விபத்துகளில் சிக்கி காயமடைந்த நிலையில் 80 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 30 பேர் வீதி விபத்துகளால் காயமடைந்துள்ளனர். பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பொதுமக்கள் அதிக கவனத்துடன் செயல்பட்டால் பண்டிகைக் காலத்தில் இது போன்ற விபத்துகளைத் தடுக்க முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க