புத்தாண்டு கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபா

புத்தாண்டு கொடுப்பனவாக, விமான நிலையம் மற்றும் விமான சேவை ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொடுப்பனவு கோரி விமான நிலையம் மற்றும் விமான சேவை ஊழியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்கப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

30,000 ரூபா புத்தாண்டுக் கொடுப்பனவு வழங்கக் கோரி விமான நிலைய வளாகத்துக்குள் போராட்டத்தை ஆரம்பித்தனர். தொழிற்சங்கங்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து புத்தாண்டுக் கொடுப்பனவாக ரூபா 25,000 வழங்க இணக்கம் காணப்பட்டது.