புதையல் தோண்டிய மூவர் கைது

கண்டி பிரதேசத்தில் தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுஹேனவத்த பகுதியில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 44,49 மற்றும் 51 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்