புதுமுகத்துவாரம் இக்னேசியஸ் வித்தியாலயத்தில் சேவைநலன் பாராட்டு விழா
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியை திருமதி புஸ்பராணி விஸ்வநாதன் மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியைகளான திருமதி ஜெ.சசிதரன்,திருமதி ர.பாலகிருஷ்ணன்,திருமதி வி.குணசீலன்,திருமதி த.ராஜமோகன்,திருமதிநி.சுஜீவ்,திருமதி திவாகரன் ஆகியோரின் சேவையைப் பாராட்டிக் கௌரவிக்கும் சேவை நலன் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் பி.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,ஓய்வு பெற்றுச் சென்ற மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியைகள் மாணவர்களால் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
இதன்போது குறிப்பிட்ட ஆசிரியைகள் தொடர்பாக வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களால் அவர்களது கடந்தகாலச் செயற்பாடுகள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்