புதிய பாராளுமன்ற உறுப்பினர் பதவியேற்பு

திருகோணமலை மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கதிரவேலு சண்முகம் குகதாசன் சற்றுமுன்னர் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவை அடுத்து கடந்த ஜூலை 02 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டிருந்தார்.

பாராளுமன்ற அமர்வு இன்று செவ்வாய் கிழமை காலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இவர் பதவியேற்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்