புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் – முழுவிபரம் உள்ளே
புதிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம செய்துக்கொண்டனர்.
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக அனில் ஜயந்த பெர்னாண்டோ.
விவசாயம் மற்றும் கால்நடைவளங்கள் பிரதி அமைச்சராக நாமல் கருணாரத்ன.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சராக வசந்த பியதிஸ்ஸ.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக அருண் ஹேமசந்திரா.
தொழிற்கல்வி பிரதியமைச்சராக நளின் ஹேவகே.
வர்த்தக, வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சராக ஆர்.எம் ஜயவர்த்தன.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சராக கமகெதர திசாநாயக்க .
வீடமைப்பு பிரதியமைச்சராக டி.பி சரத் .
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதியமைச்சராக ரத்ன கமகே .
தொழில் பிரதியமைச்சராக மகிந்த ஜயசிங்க .
பாதுகாப்பு பிரதியமைச்சராக அருண ஜயசேகர .
சுற்றாடல்துறை பிரதியமைச்சராக எண்;டன் ஜயகொடி
தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சராக மொஹமட் முனீர்
டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சராக பொறியிலாளர் எரங்க வீரரத்ன
இளைஞர் விவகார பிரதியமைச்சராக எரங்க குணசேகர
கைத் தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதியமைச்சராக சத்துரங்க அபேசிங்ஹ
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சராக பொறியிலாளர் ஜனித் ருவன் கொடித்துவக்கு
மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதியமைச்சராக வைத்தியர் நாமல் சுதர்ஷன
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் பிரதியமைச்சராக ருவன் செனரத்
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சராக வைத்தியர் பிரசன்ன குமார குணசேன
சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சராக வைத்தியர் ஹங்சக்க விஜேமுனி
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக சுந்தரலிங்கம் பிரதீப்
கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சராக உபாலி சமரசிங்க
விளையாட்டுத்துறை பிரதியமைச்சராகசுகத் திலகரத்ன சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்