புகையிரத நிலையத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கொழும்பு – தெமட்டகொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று திங்கட் கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 12 கிராம் 100 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.