புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்து : 8 பேர் உயிரிழப்பு!

கிரேக்க தீவான சமோஸ் கடல் பகுதியில் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

36 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை, குறித்த படகில் 50 பேர் பயணம் செய்ததாகவும், காணாமல் போனவர்களை தேடும்பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.