பிள்ளையானுடன் உரையாட ரணிலுக்கு அனுமதி மறுப்பு

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் பேசுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுடன் பேசுவதற்கு முன்னாள் ஜனாதிபதி குற்றப்புலனாய்வு துறையினரிடம் அனுமதி கோரியதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிள்ளையானுடன் தொடர்பு கொள்ள கோரியுள்ளார்.

காவலில் உள்ள சந்தேக நபர் தொலைபேசியில் தொடர்பு கொள்வது சட்டவிரோதமானது என்பதால் அந்தக் கோரிக்கை மறுக்கப்பட்டதாக அமைச்சர் விஜேபால கூறினார்.

இருப்பினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு சந்திரகாந்தனைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க