பிள்ளையானுக்கு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்பு? பொது பாதுகாப்பு அமைச்சர் சபையில் தெரிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புபடுத்தும் குறிப்பிடத்தக்க அளவு தகவல்கள் வெளியாகியுள்ளதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு குற்றத்தையும் மறைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், எந்தவொரு குற்றவாளியும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க மாட்டோம். நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது கட்டாயமாகும். நீதி வெல்ல வேண்டும், இதை அடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று அமைச்சர் விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான், 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் கடந்த 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க