
பிள்ளைகள் முன்னிலையில் ஆபாச புகைப்படம் எடுத்த பெற்றோர் கைது
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணம் ஹாமில்டன் நகரில் தமது பிள்ளைகள் முன் ஆபாச புகைப்படங்கள் எடுத்த பெற்றோரை அந்த நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வரும் பொலிஸ் உத்தியோகஸ்தரும் அவரின் மனைவியுமே தமது 2 பிள்ளைகள் முன் ஆபாச புகைப்படங்கள் எடுத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இவர்களது கையடக்க தொலைபேசியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்கள் காணப்பட்டுள்ளன. அவற்றில் சில புகைப்படங்களில் அவர்களின் பிள்ளைகள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது .
இதேவேளை குறித்த தம்பதியினரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.