பிறந்து 14நாட்களே ஆன பெண் குழந்தையை கொன்ற தந்தை கைது

இந்தியாவில் ஓசூரை அருகே பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையை பாறை மீது வீசிக் கொன்றதாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒன்னுகுறிக்கி கிராமத்தைச் சேர்ந்த மாதையன் – சின்னம்மா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகன், மகள் உள்ள நிலையில், 2 வாரங்களுக்கு முன்பு மீண்டும் பெண் குழந்தை பிறந்ததாக தெரிய வந்துள்ளது.

இன்னொரு பெண் குழந்தை தேவையில்லை, கொன்றுவிடலாம் எனக் கூறி மனைவியிடம் தகராறு செய்து வந்த கணவர், நேற்றைய முன்தினம் வியாழக்கிழமை மாலை குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடியுள்ளார்.

அவரை மனைவியும் உறவினர்களும் விரட்டிக் கொண்டு ஓடிய நிலையில், அவர்கள் கண்முன்னே கணவர் குழந்தையைத் தூக்கி பாறை மீது வீசியதாகவும், இதில் பாறை இடுக்கில் சிக்கி குழந்தை பரிதாபமாக இறந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்