பிரேசில் நாட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: 30 பேர் காயம்

மாட்ரிட்டில் இருந்து உருகுவே பயணித்த விமானம் பிரேசில் நாட்டில் அவசரமாக தரை இறக்கப்பட்டுள்ளதாக ஸ்பானிஷ் விமான நிறுவனமான ஏர் யூரோபா தெரிவித்துள்ளது.

குறித்த விமானம் சீரற்ற கால நிலை காரணமாகவே பிரேசில் நாட்டில் உள்ள நடால் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விமானத்தில் பயணித்த பணயிகளில் 30 பேர் வரையில் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மாட்ரிட்டிலில் இருந்து இன்று செவ்வாய்கிழமை மற்றொரு விமானம் புறப்பட்டு, பிரேசிலில் சிக்கியுள்ள பயணிகளை ஏற்றிக்கொண்டு உருகுவேக்கு பயணத்தைத் தொடர தயாராக இருப்பதாக ஸ்பானிஷ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்