Sri Lanka Tamil News Site

பிரித்தானியாவில் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

- Advertisement -

பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது பேரணியாக சென்று பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள திடலில் தமிழீழ தேசிய கொடியேற்றலுடன் S.சிவதர்சன் தலைமையில் பொது நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

- Advertisement -

21ஆம் நூற்றாண்டின் அதியுச்ச இனவழிப்பு இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றிருந்தமையும், முள்ளிவாய்க்காலில் கொத்துகொத்தாக கொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நாளாக மே18 இலங்கை உட்பட பல புலம்பெயர் நாடுகளில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையிலேயே, முள்ளிவாய்க்கால் நினைவு தினம் பிரித்தானியா பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

- Advertisement -