பிரித்தானியாவில் அதிகரித்த பனிப்பொழிவு
அதிக பனிப் பொழிவு காரணமாக பிரித்தானிய மன்செஸ்டர், லிவர்பூல் ஜோன் லெனான் மற்றும் பர்மிங்காம் விமான நிலையங்களின் ஓடுபாதைகள் மூடப்பட்டுள்ளன.
ஓடுபாதையில் உள்ள பனிக் கட்டிகளை அகற்றும் பணிகள் தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.
தற்போது பிரித்தானியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், அங்கு தற்போது, மறை 11 செல்சியஸ் அளவில் பனிப் பொழிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்