பிரதான வீதியில் பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து ஸ்தம்பிதம்!
-கிண்ணியா நிருபர்-
தற்போது நிலவி வரும் சீரற்ற காலை நிலை காரணமாக இன்று தம்பலகாமம் சந்தியின் திருகோணமலை கண்டி பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததையடுத்து போக்குவரத்து ஒரு சில மணிநேரம் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது.
இதனை அடுத்து தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதலுக்கிணங்க வீதி அபிவிருத்தி அதிகார சபை, தம்பலகாமம் பொலிஸார், இராணுவத்தினர்கள் இணைந்து குறித்த மரத்தை அப்புறப்படுத்தியிருந்தனர்