
பிரதமர் மோடி கொழும்பு வந்தடைந்தார், இலங்கையின் ஆறு முக்கிய அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று வெள்ளிக்கிழமை கொழும்பை வந்துள்ளார். இந்த விஜயத்தின் போது இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து பல்தரப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஈடுபாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
தாய்லாந்து பயணத்திற்குப் பின்னர் பிரதமர் மோடி இலங்கை வந்தார். தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தி பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். உச்சிமாநாட்டின் பின்னர் அவர் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தினார்.
கொழும்பில் பெய்துவரும் மழையையும் பொருட்படுத்தாமல், இலங்கையின் ஆறு உயர் அமைச்சர்கள் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பில் வரவேற்றனர் என, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத்; சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மற்றும் அரசாங்க தலைமை கொறடா நளிந்த ஜெயதிஸ்ஸ் தொழிலாளர் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் அனில் ஜெயந்த் மீன்வளம், நீர்வாழ் மற்றும் பெருங்கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன ஆகியோர் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இந்தியாவின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி அனுராதபுரத்திற்குச் செல்வார். பிரதமர் மோடி கடந்த 2019 இல் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர். பிரதமர் மோடியின் இலங்கை வருகை குறித்து இந்தியக் கொடிகளை ஏந்திய வண்ணம் இலங்கையில் உள்ள இந்திய மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
“நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். இந்தியா இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பிரகாசித்து வருகிறது. இன்று உலக வரைபடத்தில் இந்தியாவை அவர் இடம்பிடித்த விதத்தால், நாங்கள் ஒரு வல்லரசாக பிரகாசிக்கிறோம்,” என்று இலங்கையில் உள்ள இந்தியர்கள் தெரிவித்தனர்.