
பிணை நிபந்தனைகள் பூர்த்தி: வீடு திரும்பினார் வியாழேந்திரன்
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று புதன் கிழமை உத்தரவிட்டது.
இலஞ்சம் பெற உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், இன்று அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததால் நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்