பால் பண்ணையாளரின் கால்நடை வளத்திற்கு தேவையான மேய்ச்சல் தரை வழங்கப்படும்

கடந்த காலங்களில் நாட்டை அபிவிருத்தி செய்வதாக கூறி பலர் பெரிதாக பேசிக் கொண்டாலும், மக்களை ஏமாற்றும் நடவடிக்கையையே அவர்கள் செய்து வந்தனர், என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், மட்டக்களப்பு மகிழவட்டுவன் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

எமது ஆட்சியில் விவசாயத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஸ்மார்ட் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்,

பால் பண்ணையாளரின் கால்நடை வளத்திற்கு தேவையான மேய்ச்சல் தரை இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லை, இதற்கான மேய்ச்சல் தரை வழங்கப்படும் .

ஆங்கில மொழி அறிவை மேம்படுத்திக் கொள்ளுமாறு பிள்ளைகளைக் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் எதிர்காலத்தை வலுப்படுத்த முடியும்.

ஒவ்வொரு பிரதேச செயலகத்தையும் உள்ளடக்கிய வகையில் கைத்தொழில் பூங்காக்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை ஆரம்பிப்போம், என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்