பால்மா விலை குறைப்பு?

எதிர்வரும் ஒரு சில மாதங்களில் பால்மா விலையை மேலும் குறைக்க முடியும் என விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பால்மா விலையை குறைப்பதற்கு மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பாலுற்பத்தி அதிகரித்துள்ளமையினால் வருமானம் அதிகரித்துள்ளது. இந்த வருமானம் அதிகரித்ததன் பிரதிபலனை நுகர்வோருக்கு வழங்கும் பொருட்டு இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் , 400 கிராம் பால்மா பொதி 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 190 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.