பாரிய தீ பரவல் : ஏ-9 வீதிக்குப் பூட்டு

அக்குறணை நகருக்கு அருகில் பேக்கரி பொருட்கள் விற்பனை நிலையம் அமைந்துள்ள மூன்று மாடி கட்டடம் ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த கட்டடம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

இந்த தீ பரவல் காரணமாக கண்டி – மாத்தளை ஏ-9 வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை,  தலவாக்கலை – பெயார்பீல்ட் தோட்டத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு தீ பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அந்த தோட்டத்தின் முதலாம் இலக்க நெடுங்குடியிருப்பின் 5 வீடுகள் இந்த தீ பரவலால் பாதிக்கப்பட்டன.

தீ பரவல் சம்பவத்தால் நிர்க்கதியான 5 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர், உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்