
பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம்
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் திடீர் மரணத்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்றத்தால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசியலமைப்பின் 66 (அ) பிரிவின் விதிகளின்படி, 2025 ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி முதல் பத்தாவது பாராளுமன்றத்தில் ஒரு இடத்திற்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக, பாராளுமன்றத்தின் பதில்
பொது செயலாளர் சமிந்த குலரத்ன, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.
கோசல நுவான் நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக தமது 38 வயதில் காலமானார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்