Sri Lanka Tamil News Site

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்

- Advertisement -

தலவத்துகொட பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 100 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

அண்மையில் நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் போது 71 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேற்படி இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக புதிய வீடொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவற்றை விரைவில் நிறைவு செய்து பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றம் தலையிட்டு அவர்களுக்கு விரைவில் வீடுகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

- Advertisement -