
பாராளுமன்ற அமர்வில் எழுந்த ஒழுங்கு பிரச்சினை: நேரடியாக ஒளிபரப்பப்படவில்லை
பாராளுமன்றத்தில் இடம்பெறும் நடவடிக்கைகள் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
எனினும் இன்று செவ்வாய்க்கிழமை சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிற்பகல் 1.40 மணி அளவில், எதிர்க்கட்சி பக்கத்திலிருந்து உறுப்பினர் ஒருவர் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார்.
ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய நபர் யார்? என்ன? ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார் என்பது நேரடியாக ஒளிபரப்பபடவில்லை.
இதன்போது, சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் ஹேமாலி வீரசேகர, சபைக்கு ஒவ்வாத வார்த்தைகளை, பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
இவ்வாறு சபையில் கூச்சல்கள் எழுந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் அறிவித்தல் திரையில் “கௌரவ சபாநாயக்கர் அவர்களினால் 2025 மார்ச் 19ஆம் திகதி அன்று பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் இந்த காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படமாட்டாது” என காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும் இவ்வாறான சம்பவம் பாராளுமன்ற வரலாற்றில் இடம்பெற்றது இதுவே முதல் தடவையாகும்.
Beta feature