சந்தையில் கோதுமை மாவை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதால், 450 கிராம் பாண் ஒன்று சுமார் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டியுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
தற்போது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 கிலோகிராம் கோதுமை மாவின் விலை இருபதாயிரம் ரூபாவுக்கும் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம், என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
இதன் காரணமாக சில பேக்கரிகள் தமது வியாபாரத்தை முன்னெடுக்க முடியாமல் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- Advertisement -