பாட்டியை கொலை செய்த பேரனின் மனைவி

கண்டியில் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை அதிகாலை வயதான மூதாட்டி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

உலப்பனை பிரதேசத்தில் வசிக்கும் 78 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட மூதாட்டி தனது பேரன் அவருடைய மனைவி மற்றும் அவர்களது 2 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக பேரனின் மனைவி இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொலை நடைபெறும் போது குறித்த நபர் வீட்டில் இல்லை என பின்னர் தெரியவந்ததுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்கால பொலிஸார் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்