
பாடலை பாதியில் நிறுத்திய அசானி: பதறும் ரசிகர்கள்
சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா இருவரும் பாடி அசத்தி வரும் நிலையில், அசானி இந்த வாரம் பாடல் பாடிய போது தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை கடந்து 3ஆவது சீசனாக தற்போது நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப நிகழ்ச்சி இலங்கை, இந்தியா என பல நாடுகளில் உள்ள சிறுவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு, ஆர்வமாக பாடிய வருகின்றனர்.
இதில் இலங்கையைச் சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா இருவரும் பாடி வருகின்றனர்.
அசானியின் அப்பா, அம்மா, மூத்த சகோதரர் ஆகியோர் தேயிலை தோட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.200க்கு வேலை பார்த்து வரும் நிலையில், மற்றொரு சகோதரர் டீக்கடை ஒன்றில் வேலை செய்து வருகின்றார்.
வாணொலி மூலம் பாடல்களைக் கேட்டு பாடி பழகிய அசானி இன்று பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்.
தற்போது அசானி தனது தாயின் கஷ்டத்தை நினைத்து இந்த ரவுண்டில் ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலை பாடியுள்ளார்.
இதில் அசானி ஒரு கட்டத்தில் பாடமுடியாமல் தடுமாற்றம் ஏற்பட்டு பாதியில் பாடலை நிறுத்தியுள்ளார். அரங்கத்தில் இருந்த நடுவர்கள், சினேகன் அவரை உற்சாகப்படுத்தி பாட வைக்க முயற்சித்து வருகின்றனர். குறித்த ப்ரொமோ காட்சி வெளியாகி ஒட்டுமொத்த பார்வையாளர்களையே கலங்க வைத்துள்ளது.